↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
டோணி தலைமையிலான இந்திய அணியில் நல்ல ஆல் ரவுண்டர் இல்லாதது தான் அதன் பலவீனம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டி குறித்தும், இந்திய அணி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
அயர்லாந்து அணியின் ஆட்டத்தை பார்த்து அசந்துவிட்டேன். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரன்களை குவித்தபோதிலும் அயர்லாந்து நம்பிக்கையை இழக்காமல் விளையாடியது.
நான் விளையாடியபோது இருந்த அணியுடன் தற்போதைய இந்திய அணியை ஒப்பிட விரும்பவில்லை. காலம் மாறிவிட்டது.
இந்திய அணியில் நல்ல ஆல் ரவுண்டர் இல்லாதது தான் அதன் பலவீனம் ஆகும். இருப்பினும் டோணியின் அருமையான வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணியில் மட்டும் கபில் தேவ் போன்று ஒருவர் இருந்திருந்தால் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினம். கபில் தேவ் போன்று இல்லாவிட்டாலும் ரவி சாஸ்திரி அல்லது அமர்நாத் அல்லது மதன்லால் போன்றோர் இருந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது டோணிக்கு நன்றாக தெரியும். அது தான் அவரது தனித்துவம் என்றார் கவாஸ்கர்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
»
worldcup
» டோணியின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?: கவாஸ்கர் விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment