மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேர்ந்த முதல் படமான 'ரோஜா' படத்தில் இருந்து தற்போது தயாராகி வரும் ஓகே கண்மணி' வரை அவருடன் பணிபுரிந்து வரும் ஒரே நபர் அனேகமாக கவியரசு வைரமுத்துவாகத்தான் இருப்பார். இந்நிலையில் மணிரத்னம் திரைப்படம் எடுக்கும் பாணி குறித்தும், அவருடைய ஓகே கண்மணி' படம் குறித்தும் வைரமுத்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
'மணிரதனம் எப்பொழுதுமே தன்னிடம் கதை சொல்லும்போது மூன்று நிமிடங்களில் கதை சொல்லி முடித்துவிடுவார் என்றும், மூன்று நிமிடங்களில் சொல்ல முடியாத கதை சிறந்த கதை இல்லை என்றும் கூறுவார். அவருடைய படங்களின் வசனங்கள் போலவே அவர் கதை சொல்லும் விதமும் கூர்மையாகவும், சுருக்கமாகவும் இருக்கும்.
ஒரு காட்சியில் தேவைப்படும் வசனத்திற்கு எவ்வளவு சொற்கள் முக்கியமாக தேவையோ அந்த சொற்களை மட்டுமே அவர் பயன்படுத்துவார். ஓகே கண்மணி' படத்தில் ஒரு காதல், காதலர்களுக்குள் ஏற்படும் நிபந்தனை, அதன்பின்னர் அவர்களிடம் ஏற்படும் மனைநிலை ஆகியவற்றை மெல்லிய கோடு வரைந்து மட்டும் எனக்கு காட்டினார். அந்த கோடுகளை வைத்து நான் சித்திரம் வரைந்து கதையை புரிந்து கொண்டேன்" என வைரமுத்து கூறினார்.
துல்கூர் சல்மான், நித்யா மேனன், ரம்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் 'ஓகே கண்மணி' படம் வரும் தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment