↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டிகளின்போது டோணி ஒரு கேப்டனாக பிரமாதமாக செயல்படும் விதம் எனக்கு மர்மமாக இருக்கிறது என்று கூறினார், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. டோணி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பெற்ற '11 வெற்றிகள்' என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த உலக கோப்பையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், டோணி தலைமையிலான அணி, உலக கோப்பையில் இதுவரை ஒரேயொரு போட்டியில்தான் தோற்றுள்ளது. அது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியாகும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டை ஆகியது. மற்றபடி அனைத்து போட்டிகளிலும், இந்தியாவுக்கு ஜெயம்தான்.
2003 உலக கோப்பையில், கங்குலி தலைமையிலான, இந்திய அணி பெற்ற தொடர்ச்சியான 8 வெற்றி சாதனையையும், டோணி, முறியடித்துள்ளார்.
இந்நிலையில், கங்குலி கூறியதாவது: ஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டித்தொடர்களின்போது டோணியின் கேப்டன்ஷிப் வியப்பை தருகிறது. பிற போட்டிகளில் இருந்ததைவிட முற்றிலுமாக டோணி அப்போது மாறிவிடுகிறார்.
பிற போட்டிகளின்போது, டோணியின் கேப்டன்ஷிப் மிக சாதாரணமாகவே தென்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களில், அவர் விஸ்வரூபம் எடுப்பது மர்மமாகவே உள்ளது.
டோணி மிகவும் கூல் கேப்டன் என்பதால்தான், வெற்றி சாத்தியம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கான காரணம் கிடையாது. டோணியும் பல நேரங்களில் கோபப்பட்டுள்ளார். ஆனால் கோபத்தை நெறிப்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது.
நடப்பு உலக கோப்பை தொடரில், ஒரு கேப்டனாக மட்டுமின்றி, வீரராகவும், சிறப்பான பங்களிப்பை டோணி அளித்து வருகிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் டோணியா, அல்லது நானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை சொல்வது கடினம். ஆனால், என்னால் உலக கோப்பையை வென்று தரமுடியவில்லை, அதை டோணி சாதித்துள்ளார் என்பதை பெருமையுடன் கூற முடியும். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
» ஐசிசி தொடர்களில் மட்டும் டோணி பெஸ்ட் கேப்டனாக மாறுவது மர்மமா இருக்கே... கங்குலி சொல்கிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment