↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஆண்மை சக்தியை அதிகரிப்பதற்காக சாப்பிடப் படும் வயாகரா மாத்திரையில் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால டென்ட் ஆகியோர் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் மனித செல்கள் மற்றும் பாக்டீரியாக்களில் புரோடீனை படிய செய்யும் தன்மை கொண்ட சாபரோன் புரோடீன் வயாகராவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே வயாகராவுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை கலந்து அவர்கள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, புற்று நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் குணமாவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புற்று நோயை குணப்படுத்த வயாகரா உதவும் என நிபுணர்கள் முடிவிற்கு வந்துள்ளனர்.
ஏற்கனவே, வயாகரா மாத்திரையில் மாரடைப்பைத் தடுக்கும் காரணிகள் இருப்பதாக கடந்தாண்டு ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், இருதயம் தொடர்ந்து சீராக செயல்பட வயாகரா உதவுவதாகவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விபரீத விளைவுகளை தருவதில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment