↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
'என்னை அறிந்தால்' வெற்றிப்படத்தை அடுத்து சிம்புவின் நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தொடங்குவார் என்ற செய்தி ஏற்கனவே வந்த நிலையில் தற்போது அவர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு படத்தை அதற்கு முன்னர் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
'10 எண்றதுக்குள்ள' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விக்ரம், அந்த படத்தை முடித்துவிட்டு கவுதம் மேனனுடன் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கவுதம் மேனனின் வழக்கமான அமெரிக்க செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடரவுள்ளது. இந்த படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கவுதம் மேனன் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, போன்ற படங்களை அமெரிக்காவில் படமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment