↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இறந்து போன மாமா உடலுடன் செல்ஃபி எடுத்து, அதனை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். அதிகம் செல்பிகளை எடுத்து வெளியிடுவது அகந்தை அல்லது தாழ்வு மனப்பான்மையையின் வெளிப்பாடு என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பிரபலங்கள் முதல் சராசரி மக்கள் வரை அனைவருக்கும் செல்ஃபி மோகம் அதிகரித்தே வருகின்றது.

இந்த செல்ஃபி மோகம் பல சமயங்களில் உயிரைப் பறிப்பதாக அமைந்து விடுகிறது. சமீபத்தில் ஓடும் ரயிலின் முன் செல்ஃபி எடுக்க முற்பட்டு டெல்லி அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


இந்நிலையில் இலங்கை இளைஞர் ஒருவர் இறந்து போன தனது உறவினருடன் செல்பி எடுத்து, அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் புகைப்படத்தை அவர் நீக்கி விட்டார். ஆனபோதும், தொடர்ந்து அவரது செயலைக் கண்டித்தும், எதிர்த்தும் சமூகவலைதளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர். 

இறந்த உடல்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது இது முதன்முறையல்ல. ஏற்கனவே வேறு சில நாடுகளிலும் இது போன்ற செல்ஃபிக்கள் எடுக்கப் பட்டுள்ளது. நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலியின் போது ஒபாமா மற்ற நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top