நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டிருக்கும் பிரபு தேவா, சமீபத்தில் இயக்கிய ஆக்சன் ஜாக்சன், தோல்வியை அடுத்து, மீண்டும் நடிக்க வந்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு அவர் தெலுங்கில் நடித்த மைக்கேல் மதன காமராஜு' படத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
தெலுங்கு இயக்குனர் விஜய் மத்தலா கூறிய கதை ஒன்று பிரபுதேவாவை மிகவும் இம்ப்ரஸ் செய்ததாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. படத்தின் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள ஒரு சாலையில் விறுவிறுப்பாக செல்வதாகவும், இந்த படத்தின் ஹீரோ கேரக்டருக்கு பிரபுதேவா மிகவும் பொருத்தமாக இருப்பதாக தான் கருதியதால் அவரை அணுகியதாகவும் விஜய் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி விறுவிருப்பாக நடந்து வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment