↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'கரண்ட் தீகா' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் சன்னிலியோன் காதலராக நடித்திருந்த நடிகர் சம்புர்னேஷ் பாபு, விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் விஜய் மில்டனிடம் இந்த படத்தின் ஹீரோயின் நடிகை சமந்தாதான் சம்பூர்னேஷ் குறித்து கூறியதாகவும், அவருடைய பரிந்துரையால்தான் அவர் இந்த வாய்ப்பை பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குனர் விஜய் மில்டனே கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment