49 ஓ, வாய்மை என பிசியாக நடித்து வரும் கவுண்டமணி அடுத்ததாக "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை" என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் சினிமாக்களுக்கு பயன்படுத்தப்படும் கேரவன் உரிமையாளராக நடிக்கும் கவுண்டமணி, பெருவாரியான காட்சிகளில் இப்போதைய இளவட்ட ஹீரோக்களைப்போன்று காஸ்டியூமில் தோன்றி கலக்குவாராம்.49 ஓ, வாய்மை என கருத்தான கதாபாத்திரங்களில் நடித்த கவுண்டமணி இந்த படத்தில் ஒரு ஜாலியான ஹீரோவாக வலம் வர உள்ளாராம். அதுமட்டுமல்லாமல், இந்த படத்தின் ஓப்பனிங் காட்சியில் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்குவது போன்ற கெட்டப்பிலேயே கவுண்டமணியும் என்ட்ரி கொடுத்து ஒப்பனிங் சாங்கில் ஆடுகிறாராம்.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடலை 16 விதமான டியூன்களில் பதிவு செய்திருக்கிறார்களாம். அதோடு ஒவ்வொரு டியூனுக்கும் கவுண்டமணியை வித்தியாசமான மூவ்மெண்ட்டில் பில்டப் கொடுத்து காட்டுகிறார்களாம் அதோடு, இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை, கவுண்டமணி இதுவரை நடித்த படங்களில் ரசிகர்ளுக்கிடையே இன்றைக்கும் பேசப்பட்டு வரும் பிரபலமான டயலாக்குகளை இணைத்து உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.
0 comments:
Post a Comment