↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடை ஒன்றில் பீர் வாங்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த காட்சி அவர் நடித்து வரும் 'நானும் ரவுடிதான்' படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று பின்னர் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்தது. இருப்பினும் ஒருசில அமைப்புகள் படக்குழுவினர்களுக்கும், நயன்தாராவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் வேலூரில் நேற்று நயன்தாராவின் உருவப்பொம்மையை இந்து அமைப்பு ஒன்று எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த காட்சி கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் தேவைதானா? என்பது குறித்து ஒரு விவாதம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. நயன்தாரா மது வாங்கி சென்றது சினிமாவில் இடம்பெறும் ஒரு காட்சிதான். இது அவருக்காக வாங்கினாரா? அல்லது வேறு யாருக்காவது கொடுக்க வாங்கினாரா? எந்த சூழ்நிலையில் இந்த காட்சி வடிவமைக்கப்பட்டது என்பதெல்லாம் படம் வெளிவந்த பின்னர்தான் தெரிய வரும்.
இதுகுறித்து எதுவுமே தெரியாமல் இந்த காட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையில்லாதது என்ற கருத்து பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் இதற்காக செல்விடும் நேரத்தை மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தினால் ஆக்கபூர்வமாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கின்றது. சினிமாவை ஒரு பொழுதுபோக்காகவும், சினிமாவாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போராட்டம் நடத்தினால், ஒரு படைப்பாளியின் உரிமையில் குறுக்கிடுவது போலாகும் என்பதே அனைவரின் எண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment