தமிழில் நடித்து வளர்ந்து இளம் நடிகரான தனுஷுக்குக் கிடைத்த இந்த மிகப் பெரிய வாய்ப்பு வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது. ஆடுகளம் படம் மூலம் தேசிய விருதையும் பெற்ற பின் சிறந்த நடிகராகவும் பெயரெடுக்க ஆரம்பித்த தனுஷிற்கு ஷமிதாப் படம் மேலும் ஒரு விருதையும் பெற்றுத் தருமா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
படம் பற்றிய விமர்சனங்கள் இப்போதே வெளிவர ஆரம்பித்துவிட்டன. படம் பெரிய வெற்றியைப் பெறுகிறதா இல்லையா என்பது கூடப் பெரிய விஷயமில்லை, தனுஷிற்கு ஹிந்தித் திரையுலகில் இன்னும் அதிகப் பேரும், புகழும் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய கூட்டணி இணைந்துள்ள இந்தப் படம் வியாபார ரீதியாகவும் பெரிய ஹிட்டானால் தனுஷ், ஹிந்தித் திரையுலகிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பார் என்பது மட்டும் உறுதி.
0 comments:
Post a Comment