மேலும் அவர் மற்ற வீரர்களையும் சட்டையை கழற்றி சுற்றுமாறு வலுயுறுத்தியதாக நியூஸ்24 கிரிக்கெட் கலந்துரையாடலில் இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.
நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்த நிலையில் வெற்றி வாய்ப்பில்லாமல் தவித்தது.
ஆனால், கடைசி நேரத்தில் மொகமது கயீஃப் (87), யுவராஜ் சிங் (69) ஜோடி சேர்ந்து 121 ஓட்டங்கள் சேர்த்தது வெற்றிக்கு வழி வகுத்தது. இதை பதட்டத்துடன் பெவிலியனில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கங்குலி, வெற்றி ஓட்டத்தை கயீஃப் எடுத்தவுடன் தனது நீல நிற சட்டையைக் கழற்றி தன் தலைக்கும் மேல் சுழற்றினார்.
அதற்கு முன்னதாக இந்திய தொடரில் மும்பையில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது. இதனைக் கொண்டாட இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார். அதற்கு பதிலடியாகவே கங்குலி லார்ட்ஸில் சட்டையைக் கழற்றி சுற்றினார்.
இது குறித்து ராஜிவ் சுக்லா கூறுகையில், இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு கங்குலி பெவிலியனிலிருந்த அனைத்து வீரர்களும் சட்டையைக் கழற்றி சுழற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சச்சின், டிராவிட், லஷ்மண் அதற்கு இசையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment