↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படவிழாவில் பவர்ஸ்டார் சீனிவாசனும், நகைச்சுவை நடிகர் சிங்கம்புலியும் ஒருவருக்கொருவர் சர்ச்சைக்குரிய விவாதம் செய்ததால் விழா மேடையே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்த மேடையில் பேசிய பவர்ஸ்டார், 'ஒருசில தயாரிப்பாளர்கள் நடிப்பதற்கு பணம் தருவதாக கூறி அழைத்து செல்கின்றனர். நடித்து முடித்தவுடன் பணம் கொடுக்காமல் செக் கொடுக்கின்றனர். அந்த செக் பணம் இல்லாமல் ரிடர்ன் வந்துவிடுகிறது.
பல பேருக்கு செக் கொடுத்து ரிடர்ன் வாங்கிய எனக்கே ரிடர்ன் ஆகும் செக் கொடுக்கின்றனர். சொடுக்கு போடுகிற நேரத்தில் என்னால் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் நல்ல வழியில் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் திருந்தினாலும் என்னை திருந்த விடமாட்டார்கள் போலிருக்கின்றது.
சில தயாரிப்பாளர்கள் பணமே இல்லாமல் படம் எடுக்கின்றனர். எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு கோடி அல்லது இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு அதன்பின்னர் படமெடுக்க வேண்டும் என்ற முறையை கொண்டுவர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நடிகர் சிங்கம்புலி, 'பணம் இருந்தால் மட்டும் ஒருவர் சினிமாவில் ஜெயிக்க முடியாது. திறமை, உழைப்பு, நம்பிக்கை இருந்தால்தான் ஜெயிக்க வேண்டும். நடிகர்கள் படுவதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை. ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுத்து முடிக்கும் முன்னர் எத்தனை இடத்தில் கடன் வாங்குவார், என்னென்ன பொருட்களை விற்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பாளர் பணம் கொடுக்கின்றாரோ இல்லையோ நடிகர்கள் நம்பிக்கையுடன் நடிக்க வேண்டும். நம்பிக்கையில்தான் வாழ்க்கை இருக்கின்றது' என்று பதிலடி கொடுத்தார் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து கூறிய பிரபல தயாரிப்பாளர் தேனப்பன், 'ஒரு படம் தயாரிக்கும் முன் இரண்டு கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என பவர்ஸ்டார் கூறினார். அதேபோல் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என நடிப்புக்காக பவர்ஸ்டார் சர்டிபிகேட் வாங்கி வர முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் இதே மேடையில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, 'சாதாரண சீனிவாசனை பவர்ஸ்டார் ஆக்கியது தயாரிப்பாளர்கள்தான். ரஜினியில் இருந்து சீனிவாசன் வரை அத்தனை நடிகர்களையும் உருவாக்கியது தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்கள் கப்பலை போன்றவர்கள். எத்தனை கேப்டன்கள் வந்தாலும், தயாரிப்பாளர்கள் என்ற கப்பல்தான் அஸ்திவாரம். பவர்ஸ்டார் இவ்வாறு பேசியது இதுவே கடைசி மேடையாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.
இந்த சர்ச்சைக்குரிய வாதங்களினால் விழா மேடை சிறிதுநேரம் பெரும் பரபரப்பு அடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment