சுட சுட திரைக்கு வந்திருக்கும் ‘ஷமிதாப்’ பாலிவுட்டில் எல்லாருடைய புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. ‘கான்’ நடிகர்களின் ராஜ்ஜியத்திற்கு மத்தியில் ஒரு பொடியன் உள்ளே நுழைந்து சும்மா ஆட்டி வச்சுட்டாரே; என்றும், அவர் ரஜினியின் மருமகனாமே என்றும் வியந்தபடி இருக்கிறார்களாம் ரசிகர்கள். முதல் படமான ராஞ்சனா கூட இந்தளவுக்கு தனுஷுக்கு வாழ்வு தரவில்லை. இந்த ஷமிதாப்பில் அமிதாப்பும், பால்கியும், பி.சி.ஸ்ரீராமும், சரிகா மகள் அக்ஷராவும் இருப்பதுதான் பெரிய அட்ராக்ஷ்ன். இவர்களுடன் தமிழ் படவுலகத்தின் ராஜாதிராஜா இளையராஜா இருப்பதையும் கூடுதல் சிறப்பாக கருதி படம் பார்க்க குவிகிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பே அமிதாப் தனுஷுக்கு ஒரு கட்டளை இட்டாராம். படத்தின் பிரமோஷன்களுக்கு வரும் நீங்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்பதுதான் அந்த கட்டளை. அதை உடனே பின்பற்ற வேண்டும் என்று கடுமையாக மெனக்கட்டிருக்கிறார் தனுஷ். இந்தியை சரளமாக கற்றுக் கொண்டு கடந்த ஒரு மாதமாக அங்குள்ள சேனல் புரமோஷன்களில் வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்கிறாராம்.
முக்கியமாக ஷமிதாப் படத்தில் தனுஷ் டப்பிங் பேசவில்லை. இவருக்கும் சேர்த்துதான் அமிதாப் பேசுகிற மாதிரி கதை போகிறதே? அப்புறம் எப்படி? ஆனால் படத்தில் சொந்தக்குரலில் பேசாத தனுஷ், நிஜத்தில் போட்டுத் தாக்குவதை கண்டு நெக்குருகி நிற்கிறது இந்தி ஃபீல்டு.
0 comments:
Post a Comment