சென்சார் விதிகளை தமிழில் கொடுக்க முடிவு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

மிதுன் தேவ், வைதேகி, சாம் பால், புலிப்பாண்டி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பட்ற’. ஜெயந்தன் இயக்குகிறார். சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு. ஸ்ரீகிருஷ்ணா இசை. காந்திகுமார் தயாரிக்கும் இதன் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட, எஸ்.வி.சேகர் பெற்றார். பின்னர், மத்திய தணிக்கை குழு பிராந்திய தலைவர் எஸ்.வி.சேகர் பேசியதாவது: நிறையபேர் சென்சாரை திட்டுகிறார்கள். படம் தயாரிக்க வருபவர்களும், இயக்குபவர்களும் சென்சார் விதிகளைப் படிக்க வேண்டும். குடும்பத்துடன் பார்க்கலாம் என்பதற்காக ‘யு’ சர்ட்டிபிகேட் தரப்படுகிறது. ‘ஏ’ சர்ட்டிபிகேட் எதற்குத் தருகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தை குடும்பத்தினருடன் பார்க்க முடியுமா? என்று யோசிக்க வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள சென்சார் விதிகளை தமிழில் ஒரு புத்தகமாகத் தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
0 comments:
Post a Comment