↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும் வாசுதெவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளன.
இந்தக் கட்சிகள் ஏற்கனவே மக்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சேவின் வருகைக்கு நீங்கள் தயாரா என்ற தொனிப்பொருளில் கரத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கருத்தரங்குகளை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன வழி நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான சிங்களப் பேரினவாத கொள்கைகளைப் பின்பற்றி வரும் மூன்று அரசியல் கட்சிகளுடன் இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்காரவும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
»
mahinda
»
news
»
news.srilanka
» ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி - வியாழக்கிழமை ஆரம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment