பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை பிரதமரும் லிபரல் ஜனநாயக கட்சி செயலருமான நிக் கிளெக் (Nick Clegg) பல கேள்விகளுக்கு சுவாரஸ்மான பதிலளித்துள்ளார்.
அப்போது அவரிடம் பேட்டி எடுத்தவர், கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை பிரதமர் டேவிட் கேமரூனை அறைய நினைத்தீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஒரு சில முறை நான் அவரை அறைய விரும்பினேன் என பதிலளித்துள்ளார். எனினும் அவரை விடாத பேட்டி கண்டவர் ஒரு 10 அல்லது 20 முறை விரும்பியிருப்பீர்களா? என்று மீண்டும் கேட்டுள்ளார்.
உடனடியாக, இல்லை அதற்கும் அதிகமாக நிறைய சந்தர்ப்பங்களில் அவரை அறைய விரும்பினேன் என நிக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நிக்கின் இந்த பேட்டி பிரதமர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment