↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன் தற்போது விரைவில் வெளியாகவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார். மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு தேர்வுக்கும் அவர் தயாராகி வருகிறாராம்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள லட்சுமி மேனன், 'தொடர்ச்சியாக பாவாடை தாவணியுடன் கிராமத்து பெண் வேடங்களில் நடித்து மிகவும் போர் அடித்துவிட்டது என்றும், அனைத்து தரப்பு கேரக்டர்களிலும் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். தற்போதைக்கு கிராமத்து கேரக்டர்களில் நடிக்கும் சினிமாக்களில் இருந்து வெளியே வர இருப்பதாகவும், ஜீன்ஸ், டாப்ஸ், சல்வார் கம்மீஸ் போன்ற உடைகளுடன் இயல்பான நகரத்து கேரக்டரில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இசை என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்று கூறியுள்ள லட்சுமி மேனன், என் இறுதி மூச்சு இருக்கும் வரை இசையை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்றார். லட்சுமி மேனனின் தாயார் ஒரு மியூசிக் டீச்சர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.லட்சுமி மேனன் தற்போது சிப்பாய் என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment