↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'நான் ஈ' திரைப்படம் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் தற்போது இயக்கி வரும் பாகுபாலி படத்தின் தமிழ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த படத்தின் தமிழ் உரிமையை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் ரூ.27 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டுடியோக்ரீன் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியபோது, 'UV கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து பாகுபாலி படத்தின் தமிழ் உரிமையை பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் 45 நிமிட காட்சிகளை தான் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், கண்டிப்பாக இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என தான் எண்ணியதால் இந்த படத்தில் முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் இந்தி உரிமை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான கரண் ஜோஹர் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டக்குபாய், சுதீப், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
»
»Unlabelled
» ரூ.27 கோடிக்கு விற்பனையான பாகுபாலி?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment