அபூர்வ ராகங்கள் படத்திற்காக ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் கண்ணாடி முன் நின்று நடித்து பார்த்து பயிற்சி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததுதான். தற்போது லிங்கா படம் தொடங்குவதற்கு முன்பும் கண்ணாடி முன் நடித்து பயிற்சி பெற்றிருக்கிறார் சூப்பர்ஸ்டார். சமீபத்தில் இத்தகவலை அவரது உதவியாளர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியதில் இருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே:
லிங்கா தொடங்குவதற்கு முன் தனது உதவியாளரை அழைத்த ரஜினி படத்தில் தான் பயன்படுத்த போகும் உடைகள், அணிகலன்கள் உட்பட அனைத்தையும் தயார் படுத்தி எடுத்துவர சொல்லியிருக்கிறார். குழம்பிப்போன உதவியாளர் படம் தொடங்க இன்னும் நாட்கள் இருக்கு. இப்போ என்ன சார் அவசரம் என கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த ரஜினி, நான் லைவ் ஆக்ஷன் படத்தில் நடித்து நான்கு ஆண்டுகள் ஆச்சு. இப்போ கிட்டத்தட்ட எனக்கு எல்லாமே மறந்து போயிருக்கும். அப்புறம் என்னால படப்பிடிப்பு தாமதம் ஆகும் என கூறி ஒரு வாரகாலம் லிங்கா கெட் அப்பில் நடித்து பார்த்த பிறகே படப்பிடிப்பில் கலந்துக்கொண்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment