அதே சமயம் முட்டை சாப்பிடுவது குறித்த பல சந்தேகங்கள் நமக்கு இருக்கிறது. அது பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.
சத்துகள் நிறைந்தது
முட்டையில் அயோடின், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், ஏ, பி2 மற்றும் டி வைட்டமின்கள், கோலின் மற்றும் புரதங்கள் ஆகியவை உள்ளன.
மேலும், ஒரு நாளுக்கு நமக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலில் பாதி அளவு முட்டையிலேயே கிடைக்கிறது.
எத்தனை முட்டை சாப்பிடலாம்?
வாரத்திற்கு ஆறு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் உஷார்!
பல முக்கிய ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அத்தியாவசியமானது கொலஸ்ட்ரால் மட்டுமே. ஒரே கவலை என்னவென்றால், முட்டையில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதன் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும்.
மூளை வளர்ச்சிக்கு உதவும்
உடல் எடை குறைவதில் முட்டையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதயம் பாதிக்குமா?
முட்டையில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதாகவும், அதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு தவறான நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் நம் உடலில் கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான பொருளே கொலஸ்ட்ரால் தான்.
0 comments:
Post a Comment