↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டாலே விறுவிறுப்பு தானாகத் தொற்றிக்கொள்ளும். டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா' படத்தின் வெளியீடு உறுதியாகிவிட்டதால் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழும் கிடைத்துவிட்டது. பின்னணி இசை, கிராபிக்ஸ் எனப் பல்வேறு இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ‘லிங்கா' குறித்துச் சேகரித்த சிறப்புத் தகவல் துளிகள் இவை.
ஒரு அணைப் பகுதியில் அடிக்கடி விபத்து, கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. அந்த அணையைக் கட்டிய ரஜினியை 
அவமானப்படுத்தியதால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று அஞ்சி மக்கள் அவரைத் தேடுகிறார்கள். அந்த அணைப் பகுதிக்கு வரும் தாதா ரஜினி, அணைப் பகுதியில் இருக்கும் கொள்ளைக் கூட்டம்தான் இவை அனைத்தையும் செய்கிறது என்று கண்டுபிடிக்கிறார். கொள்ளைக் கூட்டத்தை அவர் ஒழித்தாரா, அணையைக் கட்டிய ரஜினி என்னவானார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

லிங்காவுக்கு முதலில் முடிவான தலைப்பு ‘வெங்கண்ணா'. பிறகு ரஜினியின் விருப்பத் தேர்வாகச் சூட்டப்பட்டதுதான் லிங்கா.
சோனாக்‌ஷி ஒரு நாயகி என்று இயக்குநர் சொல்ல, “என்ன இப்படிச் சொல்றீங்க. சோனாக்‌ஷி எனது நண்பரின் மகள் “ என்று கூறியிருக்கிறார் ரஜினி.” அதெல்லாம் சரியாக இருக்கும் சார். உங்களுக்கும் வயது குறைந்துகொண்டே செல்கிறது” என்று கூறிச் சம்மதம் வாங்கிவிட்டாராம் கே.எஸ்.ரவிகுமார்.



ரஜினிக்கு ஜோடியாக மணிபாரதி என்ற கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா. இப்படத்தில் ஒரு காதல் பாடலைத் தவிர மற்றக் காட்சிகளில் ஜாக்கெட் அணியாது சேலை மட்டும் உடுத்தி நடித்திருக்கிறார். 1940-களில் ரஜினிகாந்த், கிராமத்துக்காகச் செய்யும் நல்ல காரியங்களுக்குத் தோள் கொடுக்கும் முக்கிய கதாபாத்திரம் சோனாக்‌ஷியுடையது.

தற்கால ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ரஜினியோடு அனுஷ்கா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மற்றும் இருவருடன் சந்தானம் செய்யும் காமெடி அனைத்துமே சிரிப்பிற்குக் கேரண்டி என்கிறார்கள்.
‘எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினியின் நடனம், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் பார்த்துவிட்டுப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ந்து போய்விட்டாராம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் படம் என்று தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். ‘மோனா’ பாடலை முதல்முறையாகக் கேட்ட ரஜினி “என்னய்யா... இப்படி எல்லாம் பாட்டு போடுறீங்க” என்று தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

ஆயிரம் துணை நடிகர்களுடன் வெயிலில் ஒரு நாள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அங்கிருந்து ரஜினியுடைய கேரவன் கொஞ்சத் தூரம் தள்ளி நின்று கொண்டிருக்கிறது. அப்போது ரஜினியிடம், “சார்.. காஸ்ட்யூம் மாற்ற வேண்டும். கேரவனுக்கு சென்று வரலாம்” என்று கூறியிருக்கிறார். “இங்கிருந்து சென்று மாற்றிவிட்டு வர நேரம் பிடிக்கும். மேக்கப் வேறு மறுபடியும் டச்-அப் பண்ண வேண்டும். அது மட்டுமன்றி, எனது ஒருவனுக்காக இவ்வளவு பேர் வெயிலில் நிற்பார்கள். ஆகையால் ஒரு லுங்கி இருக்கிறதா?” என்று கேட்டு வாங்கிப் படப்பிடிப்பு தளத்திலேயே உடைகளை மாற்றி நடித்துக் கொடுத்திருக்கிறார் ரஜினி.


“லிங்கா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று இருக்கிறது. அந்தக் காட்சியில் ரஜினி கோட், சூட் எல்லாம் போட்டுக்கொண்டு ஸ்டைலாக நடிக்க வேண்டும். அப்போது அந்த ஹோட்டலின் மாடியில் ரஜினிக்கு மட்டும் ஓர் அறையை ஒதுக்கி இருக்கிறார்கள். ஷாட் முடிந்தவுடன் உதவி இயக்குநர், ரஜினியிடம் சென்று, “சார்.. நீங்கள் மாடியில் உள்ள அறையில் இருங்கள். ஷாட் ரெடியான உடன் கூப்பிடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

“யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? நான் இங்கிருந்து மேலே சென்று வர நேரமாகும். அது மட்டுமன்றி, நீங்கள் ஷாட் ரெடி என்று ஒருவரிடம் சொல்லி, அவர் மேலே வந்து, நான் கீழே வந்து மேக்கப் போட்டு ரெடியாகி நடிக்க வேண்டும். எவ்வளவு நேரமாகும்? நான் இங்கேயே இருக்கிறேன். எனக்குப் பிரச்சினையில்லை. ஷாட் ரெடியானவுடன் சொல்லுங்கள்” என்று ஓரமாக ஓர் இடத்திற்கு சென்று நின்றுகொண்டு இருந்திருக்கிறார். கோட் காலரில் வியர்வை பட்டுவிடக் கூடாது என்று கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஷாட் ரெடி என்றவுடன் நடித்துக் கொடுத்திருக்கிறார்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top