தனது நண்பன் அசோக் வசந்தகுமாரன் பட டைரக்டர் தங்கையின் திருமணத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காகவே ரம்மி படத்தின் கதை சற்றே டம்மியாக இருந்தபோதும் நடித்துக் கொடுத்தார் விஜய் சேதுபதி.
அதில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை 16 லட்சத்தை அப்படியே அசோக் கையில் கொடுத்துவிட்டுதான் நடிக்க கிளம்பினாராம் அவர். கடைசியில் ரம்மி அவரையும் கும்மி, அப்படத்தை வாங்கியவர், வெளியிட்டவர் என்று எல்லாரையும் கும்மி எடுத்துவிட்டது. விநியோகஸ்தர் மணிகண்டன் தொடர்ந்த வழக்கில் அப்படத்தின் மொத்த விநியோகஸ்தர் ஜே.எஸ்.கே சதீஷுக்கு செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துவிட்டது நீதிமன்றம். இது ஒருபுறமிருக்க, கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் விஜய் சேதுபதி. ஏன்?
அண்மையில் வெளிவந்த வன்மம் படத்திற்கு ஓப்பனிங்கே இல்லை. சரி, மறுநாளாவது சரியாகும் என்று எதிர்பார்த்தால் தியேட்டரில் நாளுக்கு நாள் கூட்டம் குறைந்ததே தவிர ஏறியபாடில்லை. சமீபத்தில் வெளிவந்த திருடன் போலீஸ் படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். போஸ்டரில் அதையே பெரிசாக அச்சிட்டிருந்தார்கள். விஜய் சேதுபதி நடித்த படம் போலிருக்கு என்று உள்ளே போனவர்களுக்கு பலத்த ஏமாற்றம். இந்த படத்திலும் கிருஷ்ணாதான் ஹீரோ. விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல் போலிருக்கிறது என்று நினைத்துதான் ஓப்பனிங் இல்லை என்று வரையறுக்கிறார்கள் சிலர்.
எப்படியிருந்தாலும் அடுத்தடுத்த தோல்விப்படங்களால் வி.சே வின் மார்க்கெட்டில் சரியான சறுக்கல்
0 comments:
Post a Comment