ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் இதனை தெரிவித்துள்ளார்.
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்கள் அவர்களை ஈர்க்க, குழந்தைகளை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்பது போல ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர்.
இந்த விளம்பரங்களை பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்கள்.
இப்படி பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளுவதன் மூலம் சமூக விரோத கும்பல்களுக்கு ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கிறது.
இந்த கும்பல்களிடம் சிக்கிய பெண்கள் ரோமானியா, பல்கேரியா, ஹங்கேரி, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
மேலும், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ராப் வெய்ன்ரைட் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment