விஜய்யின் 58வது படத்தில் ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது ஈ.சி.ரோடு அருகில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், ஸ்ரீதேவி இருவரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள சுதீப், 10 வருடங்களுக்கு முன்பே விஜய்யை சந்தித்துள்ளதாகவும், அப்போதிலிருந்தே இருவரும் நண்பர்கள் என்றும் சொல்லி இருக்கிறார் சுதீப்.
அதாவது, 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மதுர படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் விஜய்யும் சுதீப்பும் சந்தித்துக் கொண்டார்களாம். மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரக்ஷிதா, கன்னட படம் ஒன்றில் சுதீப்புக்கும் ஜோடியாக அப்போது நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த இரண்டு படங்களுக்குமான படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்ற போது, சுதீப்பை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரக்ஷிதா. அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும், இரண்டு வருடங்கள் கழித்து பிரபுதேவா கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
தற்போது விஜய் 58 படத்தின் படப்பிடிப்பில் விஜய், சுதீப் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம். அதன் காரணமாக, சமீபத்தில் சுதீப்பை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருக்கிறார் விஜய்.
0 comments:
Post a Comment