↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கிரிக்கெட் போட்டியில் சீறி வரும் பந்தால் பல வீரர்கள் விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் தான் தலை முதல் கால், கை என அனைத்திற்கும் பாதுகாப்பு கவசம் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆரம்பகால கிரிக்கெட் போட்டியில் இத்தகைய வசதிகள் கிடையாது.
பாதுகாப்பாக இருந்தாலும் புயல்வேக பந்துவீச்சாளர்களின் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வரும் பந்து, துடுப்பாட்டக்கார்கள் முதல் களத்தில் இருக்கும் வீரர்களையும் பதம் பார்த்து சில விபரீதங்களை ஏற்படுத்து விடுகிறது.
கிரிக்கெட்டில் பந்து தாக்கி காயமடைந்த சில நிகழ்வுகள் விவரம் வருமாறு:-
*1932-33ம் ஆண்டு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்டு லார்வுட் வீசிய பந்து தாக்கியதில் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்டுபீல்டுக்கு மண்டைஓடு உடைந்தது
*1959ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து நெஞ்சில் தாக்கியதில் 17 வயதான பாகிஸ்தான் இளம் வீரர் அப்துல் அஜீஸ் நிலைகுலைந்து நினைவு திரும்பாமலேயே உயிரை விட்டார்.
*1962ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிப்பித்தின் தாக்குதலில் இந்திய அணித்தலைவர் நரி கான்ட்ராக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு 6 நாட்கள் சுயநினைவே இல்லை. உயிர் பிழைக்க ரத்தம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்கவில்லை.
*1975ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் லெவர் வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் இவென் சாட்பீல்டின் நெற்றியை அசுரத்தனமாக தாக்கியது. இதில் நாக்கு வெளியே தள்ளி, மூச்சே நின்று போனது. விபரீதத்தை உணர்ந்த இங்கிலாந்து பிசியோதெரபிஸ்ட் பெர்னட் தாமஸ், உடனடியாக இதயத்தில் மசாஜ் செய்து அவரை காப்பாற்றினார்.
*1977ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த நூற்றாண்டு கால நினைவு டெஸ்டில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பாப் வில்லிசின் சீற்றத்தில், அவுஸ்திரேலிய வீரர் ரிக் மெக்கோஸ்கரின் தாடை நொறுங்கியது. தேவைப்பட்டதால், 2வது இன்னிங்சில் அவர் தலையில் கட்டுபோட்டுக் கொண்டு துடுபெடுத்தாடி 25 ஓட்டங்கள் எடுத்தார். அந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
*1986ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர் மால்கம் மார்ஷல் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கின் மூக்கு உடைந்தது.
*1998ம் ஆண்டு வங்கதேச வீரர் அடித்த ஒரு ஷாட், துடுப்பாட்டக்காரருக்கு மிக அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த இந்திய வீரர் ராமன் லம்பாவின் தலையை தாக்கியதில் உயிரிழந்தார். லம்பாவின் வயது 38.
*2002ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் ஆன்டிகுவா டெஸ்டில் இந்திய வீரர் அனில் கும்பிளே துடுப்பெடுத்தாடிய போது, தில்லான் வீசிய பந்தில் முகத்தில் காயமடைந்தார். தாடை எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது. அதன் பிறகும் அவர் 20 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடினார். பிறகு 2வது இன்னிங்சில் தலையில் கட்டுபோட்டுக் கொண்டு தைரியமாக களம் இறங்கிய அவர் தொடர்ந்து 14 ஓவர்கள் பந்து வீசியதுடன், லாராவின் விக்கெட்டையும் கைப்பற்றி பிரமிக்க வைத்தார்.
*2012ம்ஆண்டு பயிற்சி கிரிக்கெட்டின் போது, பந்து பட்டு ஸ்டம்பு மீது வைக்கப்பட்டிருந்த பெய்ல்ஸ் குத்தியதில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரின் இடது கண் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஓராண்டுக்கு முன்னரே முடிக்க வேண்டியதாகி விட்டது.
*அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு அவுஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டத்தில் தெற்கு அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் தலையில் பந்து தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top