↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து.
பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது, ஆயுளை அதிகரிக்கும்.
வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது.
சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக் காய்களை போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து கண்களை நன்குகழுவினால் , கண்சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை இது குணப்படுத்தும்.
நெல்லியில் உடலுக்குஅவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிகளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது.
உயிர்ச் சத்தான வைட்டமின் 'சி' சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன.
பட்டை, வேர்,இலைகள், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப்பயனுள்ள பகுதியாகும்.
இலைகளின் சாறு நாட்பட்டபுண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினை தீர்க்கும்.
பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மைகொண்டவை. சிறுநீரகக்கோளாறு, இரத்தச்சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரணநோய்களுக்கு நன் மருந்தாகிறது.
சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற நெல்லிக்காய் உதவும்.
நெல்லிப்பழங்களை விதைநீக்கி இடித்துச் சாறு பிழிந்து சமஅளவு சர்க்கரைசேர்த்து மணப்பாகு தயார்செய்து அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்தசம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கைநடுக்கம் குணமாகிறது.
நெல்லிக் காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன்குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை.
நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டு சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்டஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
நெல்லிக் காய் இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற் புண், இரத்தப் பெருக்கு, நீரிழிவு, கண்நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
நெல்லிக் கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவகுணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்னவேண்டும்.
அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.
இவ்வளவு மருத்துவ பலன்களை கொண்ட நெல்லிக்காயை தினசரி வாழ்வில் பயன்படுத்தி உடல்நலத்தை பெறுவோம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top