விஜய், விக்ரம் இருவரும் சிறுவயலிருந்து நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கூட என்னுடைய நெருங்கிய நண்பர் விக்ரம் தான் என்று கூறியிருந்தார்.
பொதுவாக விஜய் படம் என்றால் காதல், ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, நடனம் என அனைத்து ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்கும். அதனால் தான் அவருக்கு கோலிவுட்டில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. மக்களை மட்டுமின்றி திரைபிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளார் விஜய். அந்த வகையில் சீயான் விக்ரமும் நானும் விஜய் ரசிகர் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுபற்றி விக்ரம் கூறுகையில், முதலில் விஜய் எனது நண்பர் என்கிற முறையில்தான் அவரது படங்களை பார்க்கத் தொடங்கினேன். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் ரொம்ப ஜாலியாக கலகலப்பாக இருக்கும். முதலில் விஜய்யின் நண்பராக மட்டுமே இருந்த நான் இப்போது அவரது ரசிகராகவும் மாறிவிட்டேன் என்கிறார்.
0 comments:
Post a Comment