↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
8வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்த்திருக்கக் கூடாது. அதைச் செய்யத் தவறி விட்டது புதிய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் என்று கூறியுள்ளார் பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய நிர்வாகம் வந்துள்ளது. இவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மூடுவிழா காண்பதுதான்.
8வது ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணியை நீக்க இவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறி விட்டனர். இப்போதும் கூட காலம் போய் விடவில்லை. ஐபிஎல் தொடரிலிருந்து சென்னையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூதாட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது.
பிசிசிஐ தலைவர் டால்மியா மற்றும் தாக்கூரின் செயல்பாடுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார் வர்மா. மேலும் அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல சீர்திருத்தங்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் துறையை சீர்படுத்தும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்றார் அவர்.
Home
»
csk
»
sports
»
sports.tamil
» சென்னை சூப்பர் கிங்ஸை தூக்கியிருக்க வேண்டும்.. மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டும் பீகார்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment