இன்றைய சினிமாவில் கவர்ச்சியாக நடித்தால்தான் தாக்கு பிடிக்க முடியும் என்ற நிலைமையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதுவும் மூன்று நான்கு படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், முத்தக் காட்சி, கிளாமர் நடிப்பு ஆகியவற்றிற்கு எதிரானவள் நான். என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளிலும் நான் நடிக்க மாட்டேன். கதாபாத்திரம் என்னைக் கவர வேண்டும்.
நான் சிறப்பாக நடிக்க அந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு சவாலைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும்” என்று கூறியுள்ளார். அதோடு கௌதமி நடித்த கதாபாத்திரங்களை போல் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment