↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கேப்டன் டோணிக்கு பிடித்த கபாப் கடை ஹாமில்டன் நகரில் உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை தான் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் 4 போட்டிகளும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நாளை நடைபெறுகிறது. நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது டோணி தலைமையிலான இந்திய அணி.
எங்கு விளையாட சென்றாலும் காரசாரமான உணவை சாப்பிட விரும்புபவர் டோணி. அவரைப் போன்றே ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேலும் காரசாரமான உணவை விரும்புபவர்கள்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், மெல்போர்ன் நகர்களில் உள்ள நான்டோஸ் உணவகத்திற்கு டோணி, ரெய்னா, ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் அடிக்கடி சென்று பெரி பெரி சிக்கன் உள்ளிட்டவற்றை சாப்பிட்டனர்.
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இருக்கும் நோவோடெல் ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ளனர். ஹோட்டலுக்கு அருகே உள்ள கபாப் சலாடீன் கடை டோணிக்கு மிகவும் பிடித்த உணவகம் ஆகும்.
கபாப் சலாட்டீன் டோணிக்கு மட்டும் அல்ல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் பிடித்த உணவகம் ஆகும். இந்திய அணி நியூசிலாந்து வரும்போது எல்லாம் டோணி, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் அந்த கபாப் உணவகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
கபாப் சலாடீன் உணவகம் நியூசிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியரான காலித் மகமூது என்பவருக்கு சொந்தமானது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment