↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டு கலைஞரான குப்ரா கடேமி என்பவர் இரும்பால் ஆன உள்ளாடையை அணிந்து தெருவில் போராட்டம் நடத்தினார். மகளிர் தினத்தையொட்டி இந்த நூதனப் போராட்டத்தை அவர் நடத்தினார். எட்டு நிமிடம் இந்தப் போராட்டத்தை நடத்திய அவருக்கு அங்கு வரவேற்பு கிடைக்கவி்ல்லை. மாறாக 2 கொலை மிரட்டல்கள்தான் வந்துள்ளன.
ஆனால், 27 வயதான குப்ரா இதற்காக எல்லாம் பயப்படவி்லை. தனதுபோராட்டம் தொடரும் என அவர் தைரியமாக கூறியுள்ளார். உண்மையில் இவர் ஏற்கனவே தெருவில் நடந்தபோது பாலியல் சீண்டலுக்குள்ளானவர் ஆவார். அப்போது அவருக்கு யாருமே உதவ முன்வரவில்லை. எனவேதான் தனது உள்ளாடை இரும்பில் ஆனதாகஇருந்திருந்தால் தனக்கு இந்த கஷ்டம் வந்திருக்காது என்பதை விளக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.
இதேபோல அவர் ஏற்கனவே 2013ம் ஆண்டும் காபூலில் ஒரு போராட்டம் நடத்தியிருந்தார். தனது முகத்தை இரு கரங்களாலும் மாறி மாறி அறைந்து அந்தப் போராட்டத்தை அவர் நடத்தியிருந்தார். பின்னர் பிப்ரவரி 26ம் தேதி இதே போல இரும்பு உடை அணிந்து, அவர் ஒரு போராட்டம் நடத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Home
»
news
»
news.world
» இரும்பு ஜட்டி அணிந்து போராட்டம் நடத்திய ஆப்கானிஸ்தான் பெண்.. பாலியல் வன்முறைக்கு எதிராக!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment