↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தொடர் வெற்றி பெற டோணியின் நம்பிக்கை அலை தான் காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயன் சாப்பல் கூறுகையில்,
இந்திய அணி தற்போது நம்பிக்கை அலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிலும் அந்த நம்பிக்கை டோணியிடம் தான் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியை இந்தியா வெல்ல டோணியின் நம்பிக்கையும், வென்றே ஆக வேண்டும் என்ற தீர்க்கமும் தான் காரணம்.
டோணி இந்திய அணியை அருமையாக ஆக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் நடந்தபோது டோணியை பார்க்கையில் அவரிடம் வேகம் இல்லை.
உலகக் கோப்பை போட்டிகளில் டோணி வித்தியாசமானவராக தெரிகிறார். இந்திய அணியும் வித்தியாசமாக ஆகியுள்ளது.
டோணி எதுவும் முடியும் என நினைப்பதும், சிறப்பான கேப்டனாக இருப்பதும் தான் பந்துவீச்சாளர்களுக்கு உதவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய பந்து வீச்சாளர்கள் தற்போது சிறப்பாக மாறி விளையாடுகிறார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டோணி உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். உலகக் கோப்பையை தக்க வைத்த கேப்டனாக வேண்டும் என்று டோணி நினைப்பது தெரிகிறது என்றார் சாப்பல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment