↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துடனான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வீரர் வில்லியம்ஸுக்கு அவுட் கொடுத்தார் மேற்கிந்திய தீவுகள் அணியின் அம்பயர் வில்சன். இதனால் புள்ளி பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியை அயர்லாந்து பின்னுக்குத் தள்ளிவிட்டது. உலக கோப்பை போட்டியில் நேற்று அயர்லாந்துடன் ஜிம்பாப்வே மோதிய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வில்சன் டி.வி. அம்பயராக பணியாற்றினார். நேற்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 331 ரன்களை குவித்தது.
இதையடுத்து சேஸ் செய்த ஜிம்பாப்வே 259 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அந்த அணியின் சியன் வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். இந்நிலையில் கெவின் ஓ பிரையன் வீசிய 47வது ஓவரின் 5வது பந்தை தூக்கியடித்தார் வில்லியம்ஸ். அவர் அடித்த பந்தை எல்லைக்கோட்டில் நின்றிருந்த மூனி கேட்ச் பிடித்தார். ஆனால் கேட்ச்சை பிடிக்கும் போது மூனியின் கால் எல்லைக்கோட்டை தொட்டுக்கொண்டிருந்தது டி.வி. ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது.
இந்த கேட்ச் குறித்த முடிவு டி.வி. அம்பயராக பணிபுரிந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வில்சனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் டி.வி. ரீப்ளேயை தெளிவாக ஆராயாமல் வில்லியம்சுக்கு அவுட் கொடுத்தார். இதனால் 6 ரன்கள் பறிபோனதுடன் ஜிம்பாப்வே அணி வில்லியம்சின் விக்கெட்டையும் இழந்தது. டி.வி. அம்பயரின் இந்த தவறான தீர்ப்பால் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே காலிறுதி வாய்ப்பையும் தவறவிட்டது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அணி இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதாவது இந்தியாவுடன் வரும் 10 ஆம் தேதியும், 15-ந் தேதி பாகிஸ்தானுடனும் மோத உள்ள அயர்லாந்து இந்த 2 ஆட்டங்களில் தோற்க வேண்டும்.
அதே சமயம் 5 ஆட்டங்களை ஆடி முடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டும். ஆக அயர்லாந்து அணி அடுத்து நடைபெறும் 2 ஆட்டங்களிலும் தோற்கவேண்டும், அதே சமயம் மேற்கிந்திய தீவுகள் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அது காலிறுதிக்குள் நுழைய முடியும். மாறாக ஒரு ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டால் மேற்கிந்திய தீவுகள் அணியின் காலிறுதி வாய்ப்பு தகர்ந்துவிடும். நேற்றைய போட்டியில் வில்சன் மட்டும் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால், அயர்லாந்து அணியின் காலிறுதி வாய்ப்பு குறைந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகியிருக்கும். ஆனால் தனது தவறான தீர்ப்பால் சொந்த நாட்டு அணிக்கே வேட்டு வைத்து விட்டார் வில்சன்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» சர்ச்சைக்குள்ளான அவுட்- சொந்த நாட்டு அணிக்கே வேட்டு வைத்த அம்பயர்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment