↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யுவராஜ்சிங்கை உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்காததற்கு கேப்டன் டோணிதான் காரணம் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். உலக கோப்பைக்கான இந்திய அமியில் யுவராஜ்சிங் பெயர் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் ரஞ்சி போட்டிகளில் அவர் அடுத்தடுத்து சதங்கள் விளாசியிருந்தார். எனவே, யுவராஜ்சிங்கை அணியில் சேர்க்காமல் இருக்க டோணியின் வற்புறுத்தலே காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதுபற்றி யாரும் வாய்திறக்கவில்லை.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவத்திடம் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் கூறுகையில், "டோணியுடன் எனது மகனுக்கு என்ன பிரச்சினை இருந்தது என்று தெரியாது. ஆனால் யுவராஜ்சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட நாட்டுக்காக விளையாடியவர்.
கடவுள் நீதியை வழங்கட்டும். டோணி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லட்டும் என்பதே எனது வேண்டுதலும் ஆகும். ஆனால், இப்படி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. யுவராஜ்சிங்கை உலக கோப்பை அணியில் சேர்க்கவில்லை என்று அறிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார். யோக்ராஜ் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதும் நினைவுகூறத்தக்கது.
இதனிடையே தந்தையின் பேட்டி குறித்து தகவல் அறிந்த யுவராஜ்சிங், டிவிட்டரில் மறுப்பு வெளியிட்டுள்ளார். யுவராஜ்கூறுகையில், "ஒவ்வொரு தந்தையைப் போலவே எனது தந்தையும் நடந்து கொண்டுள்ளார். நான் எப்போதுமே டோணியின் தலைமையில் ரசித்துதான் விளையாடியுள்ளேன். இனிமேலும் அதேபோல விளையாடுவேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகனாக தேர்வானவர் யுவராஜ்சிங். ஆனால் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக அதிக பந்துகளை சந்தித்து சொற்ப ரன்களை சேர்த்த பிறகு இந்திய அணியில் இருந்து யுவராஜ் கழற்றிவிடப்பட்டார்.
இந்திய அணியில் யுவராஜ் புறக்கணிப்புக்கு உள்ளான நிலையில், ரூ.14 கோடி கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக வாங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் யுவராஜை விடுவித்தது. இதனிடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ்சிங் டெல்லி அணிக்காக ரூ.16 கோடிக்கு ஏலம்போயுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment