திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலங்கை அதிபர் சிறசேன வருகை தந்தபோது, கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. |
ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டதால் தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றபோது அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், சிறிது நேரம் கழித்து வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்ட பின்னர் சுப்ரபாத சேவை செய்யப்பட்ட பிறகு பாலசிறிசேனவும் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், மூலவர் அறையின் தங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் சாமிதரிசன சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். |
இலங்கை அதிபரின் திருப்பதி வருகையின் போது உடைக்கப்பட்ட தங்க கதவின் பூட்டு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment