↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஆட்டம் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. 

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இந்தியா ஒருமுறை கூட தென்னாப்பிரிக்காவை தோற்கடித்ததே இல்லை. இந்நிலையில் தான் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்று இந்திய ரசிகர்கள் நகத்தை கடித்துக் கொண்டிருக்கின்றனர். 


இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் மற்றும் இந்திய அணியின் மேனேஜர் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,

தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர்களான கிரிஸ்டன் மற்றும் ஹஸ்ஸியை பற்றியே இந்திய அணி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது போன்றே ஆடினால் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று சாப்பல் தெரிவித்துள்ளார்.

டோணியிடம் இருந்து அதே தலைமை குணங்கள் வெளிப்பட்டால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் பற்றி எனக்கு கவலை இல்லை. ஸ்டெய்ன் இருக்கிறார், மோர்கல் ஆட்டம் சரியில்லை, பிலாண்டர் வேகமாக விளையாடுவது இல்லை, இம்ரான் தாஹிர் ஆஸ்திரேலியர்களிடம் தோற்றார். ஆஸ்திரேலியாவை விட இந்தியா அருமையாக ஸ்பின் செய்யும் என்றார் சாப்பல்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டனுக்கு டோணி அன்ட் கோ உடை மாற்றும் அறையில் எப்படி நடந்துகொள்வார்கள் என்று நன்கும் தெரியும். ஹஸ்ஸி ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்திருப்பார்கள் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை இந்தியா லேசில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தியா துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி குறைந்தபட்சம் 260-270 ரன்கள் எடுக்க வேண்டும் என்றார் கவாஸ்கர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top