↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டித் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் விலகியுள்ளார்.
உலகக்கிண்ண தொடரின் கடந்த சனிக்கிழமை நடந்த லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 111 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்த போட்டியில் காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜேம்ஸ் பால்க்னர் களம் இறங்கவில்லை.
24 வயதான பவுல்க்னெர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் விளையாடுவது சந்தேகம்.
எதிர்வருகிற 21ம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறும் 2வது லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை பால்க்னர் இழந்துள்ளார். எனினும் விரைவில் களம் திரும்புவேன் என்று பால்க்னர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top