↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று யூ.ஏ.இயுடன் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரேஜிஸ் சக்கப்வா ஹிட்விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதுவரை நடந்த உலக கோப்பைகளில் 7 முறை வீரர்கள் இதுபோன்ற மோசமான ஒரு அவுட்டை ஆகியிருந்த நிலையில் எட்டாவது வீரராக அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் சக்கப்வா. இந்த எட்டு அவுட்டுகளில் 5 முறை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்களே அவுட் ஆகியிருப்பது விந்தையாகும். 

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் ரேஜிஸ் சக்கப்வா 35 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவந்தார். ஆனால் யூ.ஏ.இ கேப்டன் தாகிர் பந்து வீச்சின்போது, லெக் திசையில் பந்தை அடித்தபோது, கால்கள் ஸ்டம்பில் பட்டு பெயில்கள் சிதறின. இதனால் ஹிட்விக்கெட் முறையில் நடையை கட்டினார் ரேஜிஸ். உலக கோப்பையில் இதுபோல அவுட் ஆவது இது எட்டாவது முறையாகும். எதிர்பாராத இந்த அவுட்டுகள் பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் தரவல்லவை. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top