↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய அணியின் பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. மிகவும் அபாயகரமான அணியாகவும் இந்த பேட்டிங் காரணமாக இந்தியா திகழ்கிறது. இந்திய அணியில் கிளாஸான வீரர்கள் பலரும் உள்ளனர். உலகக் கோப்பையை தக்க வைக்கக் கூடிய வகையில் இந்த அணி உள்ளது என்பதிலும் சந்தேகம் இல்லை.
அதேசமயம், இந்தியாவி்ன் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது என்பதையும் மறுக்க முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார். பான்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை உலகக் கோப்பையை வென்ற பெருமை கொண்டது. தற்போது ஓய்வு பெற்று விட்டு பான்டிங் உலகக் கோப்பை குறித்துப் பேசியுள்ளார். அதில் இந்திய அணியை அவர் புகழ்ந்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாதான் கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார்.
பான்டிங்கின் பேட்டியிலிருந்து...
இந்திய அணியில் பல தரமான கிளாஸான வீரர்கள் உள்ளனர். மிகவும் அபாயகரமான அணி இந்தியா.
இந்திய வீரர்களின் திறமை அனைத்தும் ஒன்று சேர்ந்துவிட்டால் அவர்களை அடிக்க ஆளே கிடையாது. மிகவும் அபாயகரமான முறையில் ஆடக் கூடியவர்கள் இந்தியர்கள்.
இந்தியாவின் முதல் போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தானை அவர்கள் வீழ்த்திய வீதம் மிகச் சிறப்பானது. இந்தியா இனும் சிறப்பாக ஆடும்.
உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முன் டெஸ்ட் தொடரிலும், முத்தரப்புத் தொடரிலும் இந்தியா மிகவும் சரிவான நிலையில் இருந்தது. ஆனால் பாகிஸ்தானுடன் நடந்த போட்டியைப் பார்த்தபோது இந்தியா முழு வீச்சில் சுதாரித்து விட்டதாகவே உணர்ந்தேன்.
ஆனால் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை. கவலைக்குரியதாகவே உள்ளது. எப்போதுமே இதே போலத்தான் இருக்கிறது இந்தியாவின் பந்து வீச்சு. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆடும்போது இந்தியாவின் பந்து வீச்சு கவலைக்கிடமாகவே இருக்கும். பேட்டிங்குக்கு அப்படியே நேர் மாறாக இருக்கிறது இந்தியாவின் பந்து வீச்சு.
இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் உள்ளது. முடிந்தவரை சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலியாவால் 4வது முறையாக கோப்பையை வெல்ல முடியும். அதேசமயம், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவும் நல்ல அணிகள்தான்.
Home
»
sports
»
sports.tamil
» இந்தியாவின் பேட்டிங் அபாரம், ஆனால் பவுலிங் கேவலம்! : அவுஸ்ரேலியா முன்னாள் கப்டன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment