↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சில நாட்களுக்கு முன்பு வரை பேஸ்புக்கில் இருக்கும் உங்களது போட்டோ ஆல்பங்களை யார் வேண்டுமானாலும் அழிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த லக்ஷமன் முத்தையா மூலம் அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதற்கு பேஸ்புக் நிறுவனம் முத்தையாவிற்கு சுமார் $12,500 பரிசு தொகை அறிவித்துள்ளது.

பிழையை மின்னஞ்சல் மூலம் தெரிவித்த முத்தையாவிற்கு அதே நாள் பேஸ்புக் தரப்பில் இருந்து பதில் கிடைத்தது. அதில் நீங்கள் கண்டறிந்த பிரச்சனையை ஆய்வு செய்து விட்டோம், இதனால் பேஸ்புக் தரப்பில் இருந்து உங்களுக்கு $12,500 பரிசு தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக சைபர் பிரச்சனைகளை கண்டறிநதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பேஸ்புக் நிறுவனம் சார்பில் சுமார் 329 பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த அருள் குமாருக்கும் $12,500 பரிசு அளத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிழை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை தனது இணைய பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார் முத்தையா. பேஸ்புக்கில் பிழை கண்டறிபவர்கள் சுமார் 51 நாடுகளில் பரவி கிடக்கின்றனர். பரிசு தொகை வென்றவர்களில் சிறிய வயதுடையராக 13 வயது சிறுவன் இருக்கிறார், அதிகபட்சமாக $20,000 வரை பேஸ்புக் தரப்பில் பரிசு தொகையாக வழங்ப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top