தற்போது மாரி' படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ், இந்த படத்தை முடித்த பின்னர் இயக்குனர் வேல்ராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் அடுத்த பாகம் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தனுஷ் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூதாடி' என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி மணிரத்னம் அவர்களின் 'ஓகே கண்மணி' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகின்றது.
இதனிடையே பாலிவுட்டில் ஷமிதாப்' வெற்றியை தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் அவர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு இந்தி படத்தில் நடிக்கவும் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான ராஜன்னாவின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது பிசியான நடிப்புப்பணிகளுக்கு இடையே பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ள தனுஷ், அந்த நிறுவனங்களின் விளம்பரப்படங்கள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவருகின்றார். அதுமட்டுமின்றி சூதாடி, நானும் ரவுடிதான், விசாரணை, மாரி போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளையும் இடையிடையே கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே 2016ஆம் ஆண்டு வரை தனுஷை வைத்து புதிய படம் எடுக்க விரும்புபவர்கள் அவரை நெருங்க முடியாத அளவிற்கு தனுஷ் டைட் ஷெட்யூலில் இருப்பதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment