பாலீஷ் போனாலும் பதக்கம் பதக்கம்தானே? இப்போதெல்லாம் மணிரத்னம் படங்கள் எதுவும் ஒடாவிட்டாலும், ஒரு காலத்தில் அவர் தந்த வெற்றிக்காகவும் புதுமைக்காகவும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது படவுலகம். இப்பவும் ‘மணிரத்னம் மாதிரி வரணும்…’ என்று லட்சிய புருஷர்களாக திரியும் இயக்குனர்களை லிஸ்ட் போட்டால் பக்கம் தாங்காது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய மணிரத்னம், தனுஷுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினாராம்.
ஷமிதாப் பார்த்தேன். உங்கள் நடிப்பு பிரமாதம் என்று குறிப்பிட்டிருந்தாராம் அதில். இந்த குறுந்தகவலால்ல குதூகலமடைந்த தனுஷ், அதை தன் நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஃபார்வேட் பண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, வருடத்திற்கு ஒரு இந்திப் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற தனுஷ், தான் நடிக்க விரும்பும் இயக்குனர்களின் வரிசையில் மணிரத்னத்தையும் வைத்திருக்கிறாராம். இந்த குறுந்தகவலும், தனுஷின் ஆசையும் ஒரு நேர்க்கோட்டில் வேலை செய்ய ஆரம்பித்தால், தனுஷின் ஆசையும் நிறைவேறினார் போலதான்! இருந்தாலும் அந்த அற்புதமான ஷமிதாப், ஓடல… என்று ஒரு குரூப்பும் ஓடுதே… என்று இன்னொரு குரூப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.
யாராவது பாலிவுட் தமிளருங்கதான் பதில் சொல்லணும்!
0 comments:
Post a Comment