↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதலின்போது 90 லட்சம் பேர் பேஸ்புக்கில் பிசியாக இருந்துள்ளனர். ஆட்டம் தொடர்பாக டிவிட்டரில் 16.94 லட்சம் டிவிட்டுகள் கீச்சப்பட்டுள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டு நகர மைதானத்தில் மோதின. இந்த போட்டியின்போது, மைதானத்தில் சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், உலகமெங்கும் பலகோடி பேர் டிவி பெட்டிகளின் முன்னாள் உட்கார்ந்து கிரிக்கெட்டை ரசித்தனர்.

அப்படி, கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோதே, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தங்களது மகிழ்ச்சி, கோபம், பரவசம் போன்றவற்றை வெளிப்படுத்தினர் நெட்டிசன்கள்.

அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த நாளில் அந்த போட்டி குறித்து 90 லட்சம் பேர் பேஸ்புக்கில் உரையாடியுள்ளனராம். போட்டி குறித்த படங்கள், ஸ்டேட்டஸ்களை அவர்கள் அப்லோடியுள்ளனர். இந்த 90 லட்சம் பேரும், 2.50 கோடி உரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.

அதில் இந்தியாவில் மட்டும் 59 லட்சம் பேர், ஒரு கோடியே 90 லட்சம் முறை போட்டி குறித்த ஸ்டேட்டஸ்களை பேஸ்புக்கில் போட்டுள்ளனர். அதேநேரம் பாகிஸ்தானில் 10 லட்சம் பேர், 30 லட்சம் உரையாடல்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவர் என்றால் போட்டியின் செஞ்சுரியனான விராட் கோஹ்லிதான். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் பவுலர் சொகைல் கான் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால் அதிகம் விவாதத்துக்குள்ளாகியுள்ளார்.

டிவிட்டரை பொறுத்தளவில், 16.94 லட்சம் டிவிட்டுகள் போட்டி தொடர்பாக கீச்சப்பட்டுள்ளன. #INDvsPAK மற்றும் #CWC15 என்ற ஹேஸ்டேக்குகளுடன் கீச்சப்பட்ட டிவிட்டுகளை பார்த்தோர் எண்ணிக்கை 118.3 மில்லியன்.

போட்டியின் முடிவில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றபோதுதான், ஒரு நிமிடத்திற்கு 9,987 டிவிட்டுகள் கீச்சப்பட்டனவாம். இதற்கு அடுத்தபடியாக கோஹ்லி சதம் அடித்தபோது நிமிடத்திற்கு 7,159 டிவிட்டுகள் வெளியாகியுள்ளன. அதேபோல கோஹ்லி 107 ரன் எடுத்து அவுட் ஆன தருணத்தில் 6,916 டிவிட்டுகள் வெளியாகியுள்ளன. இவைதான் டாப்-3 தருணங்களாகும்.

பிரதமர் நரேந்திரமோடி, விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ்சிங், சினிமா கலைஞர்களான ஷாருக்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் போட்டி தொடர்பாக வெளியிட்ட கீச்சுகள் அதிகம் முறை ரீடிவிட் ஆகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top