நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தி.மு.க.வில் முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார். தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி சர்ச்சை கருத்தை அவர் வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இ ந் நிலையில் கடந்த சில தினங்களாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த குஷ்பு பாஜகவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று ட்டுவிட்டரில் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் சந்திப்புக்கு பின் குஷ்பு காங்கிரசில் இணைவது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment