திரைப்பட விழாக்கள் என்றாலே அதில் யாராவது ஒருத்தராவது, நாங்க இந்தப் படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா…என பேச ஆரம்பித்து விடுவார்கள்.
எல்லா வேலையுமே கடினமான வேலைதான், சுலபமாக எதுவுமே வந்து விடாது. ஆனால், சினிமாவில் பலர் அப்படிப் பேசுவதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதோ இல்லையோ சில சமயங்களில் ஆத்திரமாகவே வரும்.
அப்படிப் பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
“இந்த படத்தோட டைரக்டர் கிட்ட அது என்ன ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’னு பேரு வச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு ஒரு காரணம் சொன்னாரு, அது நல்லா இருந்தது. ஒரு ஹாரர் படத்தை காமெடியா ட்ரீட் பண்ணியிருக்காங்க. கண்டிப்பா இந்தப் படம் நல்லா வரும்னு எதிர்பார்க்கிறேன்.
முக்கியமா ஒண்ணு சொல்லணும், சேதுபதி கஷ்டப்பட்டான், ஹார்ட் ஒர்க் பண்ணான்னுலாம் சொல்றாங்க. சினிமா மட்டும் இல்லை, எல்லா விஷயமும் ஈஸியா வந்துடாது.
கஷ்டப்பட்டதைப் பத்தி பேசறதுல எந்த பிரயோஜனமும் இல்லன்னு எனக்குத் தோணுது. நம்ம வேலையைப் பார்த்துப் போயிக்கிட்டேயிருந்தா சூப்பர். என்ன கஷ்டப்பட்டோம்கறதுலாம் தேவையேயில்லை. நம்ம வேலை என்ன பேசுதோ, அதுதான் முக்கியம்,” எனப் பேசினார் விஜய் சேதுபதி.
உண்மைதான்…நாம் செய்த வேலையைப் பற்றி நாம் பேசுவதை விட நம் வேலை பேசட்டும்…
.......................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment