மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன். நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம் என்று தனது ரசிகர்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல வீதி ஒன்றினை சில சமூக சேவகர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்த காட்சியை தனது டுவிட்டர் அபிமானிகளுடன் பிரியங்கா சோப்ரா இன்று பகிர்ந்துக் கொண்டுள்ளார். குப்பைகளை அள்ளும் தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட அவர், ’சுத்தமான இந்தியா’ திட்டத்துக்கு என்னால் இயன்ற பங்களிப்பு இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை பாராட்டியுள்ளார்.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment