குவார்ட்டரும், பிரியாணி பொட்டலுமும் கொடுத்து தான் தனது லத்திகா படத்தை 225 நாட்கள் ஓட்டியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் ஹீரோவாக வாய்ப்பு தேடி பலர் கால் வலிக்க கோடம்பாக்த்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் திடீர் என்று இயக்குனர், ஹீரோ என்று இரட்டை அவதாரம் எடுத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அவர் அந்த இரட்டை அவதாரம் எடுத்தது லத்திகா படத்தில். லத்திகாவா அப்படி ஒரு படம் ரிலீஸானதா என்று நீங்கள் கேட்டால் யோவ், அது சூப்பர் டூப்பர் ஹிட் படம் என்பார் பவர் ஸ்டார். காரணம் படம் 225 நாட்கள் ஓடியது.
225 நாட்கள் ஓடிய படமா, அப்படி இருந்தும் எங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் பவர்ஸ்டார் அளிக்கும் விளக்கத்தை படித்துப் பாருங்கள். சென்னையில் நடந்த குறும்பட திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பவர் கூறுகையில்,
லத்திகா
லத்திகா படம் உண்மையில் 10 நாட்களே ஓடியது. ஆனால் படத்தை எளிதாக 100 நாட்கள் ஓட வைக்கலாம் என்று என்னிடம் தெரிவித்தார்கள். எப்படி என்று கேட்டதற்கு ஒரு குவார்ட்டரும், பிரியாணி பொட்டலும் கொடுத்தால் போதும் என்றார்கள்.
225 நாட்கள்
குவார்ட்டர் மற்றும் பிரியாணி கொடுத்தே லத்திகா படத்தை 225 நாட்கள் ஓட்டினேன். 100வது நாளை கொண்டாட வேண்டும் என்றார்கள். அதன்படி பணம் செலவழித்து அதையும் கொண்டாடினேன்.
ஆனந்த தொல்லை
ஆனந்த தொல்லை படத்தை தினமும் ரூ.8 ஆயிரம் செல்வு செய்தால் எடுத்துவிடலாம் என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார். சரி என்று படத்தை துவங்கினால் தினமும் ரூ. 3 லட்சம் செலவானது. செலவு செய்து படத்தை எடுத்து முடித்துவிட்டேன்.
கைது
இத்தனைக்கும் இடையே நான் கைது செய்யப்பட்டேன். நான் எங்கும் ஓடவில்லை. அழைத்தால் வருவேன். தற்போதும் என்னை பலர் நடிக்க அழைக்கிறார்கள். சம்பளத்தை பற்றி பேசினால் மட்டும் சார் உங்களிடம் இல்லாத பணமா என்கிறார்கள். உண்மையாகவே என்னிடம் பணம் இல்லை. எனவே நடிக்க அழைத்தால் சம்பளமும் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பவர்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
...........................................................................................................
0 comments:
Post a Comment