↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் கார்த்தி-நாகார்ஜுனா நடித்து வரும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியா எடுத்த சட்ட நடவடிக்கையால் புது படங்களில் ஸ்ருதி ஹாசன், நடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் ஸ்ருதிஹாசன் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் "பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வித முன் பணம் தான் பெறவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒப்பந்தத்தில் கால்ஷீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தனக்குதெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தும் ஏப்ரல் 2ஆம்தேதி படப்பிடிப்புக்கு மார்ச் 17ஆம் தேதிதான் தன்னிடம் படக்குழுவினர் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் புலி படத்தில் பிசியாக நடித்து கொண்டு இருந்ததால் மீடியா ஹவுஸ் நிறுவனத்தின் படத்திற்கு தன்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்றும் அதனால்தான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்ததாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் தன்மீது நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவை நாயகியாக மீடியா ஹவுஸ்  ஒப்பந்தம் செய்து விட்டது என்றும் ஆனால் இந்த விஷயத்தை கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள் என்றும் ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே புது படங்களில் நடிப்பதற்கு தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top