ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்து வரும் 'அப்பாடக்கர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் த்ரிஷாவின் பகுதி படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியுடன் இணைந்து கடைசியாக ஒரு பாடல் காட்சியில் நடித்து முடித்த த்ரிஷா, படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெறும்போது அவர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விவேக் இரு வேடங்களில் நடிக்கின்றார். மேலும் ஒரு காமெடியனாக சூரியும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் த்ரிஷா தவிர இன்னொரு கதாநாயகியாக நடிகை அஞ்சலியும் இந்த படத்தில் நடித்து வருகிறார். அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கின்றார்.
ஜூன் அல்லது ஜூலையில் அப்பாடக்கர் படம் ரிலீஸாகும் என எதிரபார்க்கப்படும் நிலையில் ஜெயம் ரவி நடித்த மற்றொரு படமான 'ரோமியோ ஜுலியட்' வரும் மே மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment